×

‘பரியேறும் பெருமாள்’ டீமை வாழ்த்திய கமல்ஹாசன்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ’காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ்
 

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

’காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததால், திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.