×

‘விஜய் சொன்ன ரகசியம்’ விஜய் சேதுபதி அம்மா மகிழ்ச்சி…

விஜய் சேதுபதி குணநலன்கள் பற்றி நடிகர் விஜய் பாராட்டி பேசியுள்ளதால் அவரது அம்மா மகிழ்ச்சி அடைந்துள்ளார். லோகோஷ் கனகராஜ் இயக்கி நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்தில் நடித்துள்ளார். இந்த காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் விஜய் படத்தில் தனது மகன் வில்லனாக நடிப்பதால் அதை பார்க்க விஜய் சேதுபதி அம்மா ஆசைப்பட்டிருக்கிறார். இதையடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு தனது அம்மாவை அழைத்து
 

விஜய் சேதுபதி குணநலன்கள் பற்றி நடிகர் விஜய் பாராட்டி பேசியுள்ளதால் அவரது அம்மா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

லோகோஷ் கனகராஜ் இயக்கி நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்தில் நடித்துள்ளார். இந்த காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.

அந்த சமயத்தில் விஜய் படத்தில் தனது மகன் வில்லனாக நடிப்பதால் அதை பார்க்க விஜய் சேதுபதி அம்மா ஆசைப்பட்டிருக்கிறார். இதையடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு தனது அம்மாவை அழைத்து சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்த்து பேசிய விஜய் சேதுபதி அம்மா, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டராம். அப்போது தனது மகன் உங்களுடன் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய், அவர் ஒரு நல்ல நடிகர், அர்ப்பணிப்பு மற்றும் பல குணநலன்கள் விஜய் சேதுபதியிடம் உள்ளது என கூறினார். இதனால் விஜய் சேதுபதியின் அம்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராம்.