‘விஸ்வாசம்’ டீசர் விரைவில்..?: தல ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் காத்திருக்கு..!
தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ’விஸ்வாசம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக பத்திரிகையாளர் உமைர் சந்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்சாரில் திரையிடப்பட்டபோது அஜித்தின் ‘விஸ்வாசம்’ டீசரை பார்த்து மிரண்டதாகவும், அவரது மேச்சோ லுக்கில் அசந்துபோனதாகவும் தெரிவித்துள்ளார்.
விஸ்வாசம் டீசரில் அஜித் வரும் காட்சிகளில் உடல் சிலிர்ப்பதாகவும் கூறிய அவர், ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வெற்றியை தொடர்ந்து ‘விஸ்வாசம்’ மாஸ் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது.