×

ஸ்டைலிஷ் லுக்கில் சசிகுமார்… மாஸ் காட்டும் போட்டோ ஷூட்…

நடிகர் சசிகுமார் ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் காட்டும் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இயக்குனர்கள் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் நடிகர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குனராக வெற்றிப்பெற்றாலும், நடிகராக தான் ரசிகர்களிடம் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என வரிசையாக பல படங்களில்
 

நடிகர் சசிகுமார் ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் காட்டும் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இயக்குனர்கள் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் நடிகர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இயக்குனராக வெற்றிப்பெற்றாலும், நடிகராக தான் ரசிகர்களிடம் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் பெற்றன.

எந்தவித கெட்டப்பும் இல்லாமல் சாதாரண கிராமத்து கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது ரிலீசுக்கு காத்திருக்கும் எம்.ஜி.ஆர். மகன், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களும் இந்த வரிசையில் அடங்கும்.

இந்நிலையில் சசிகுமார் ஸ்டைலிஷான போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். இதில் நீல நிற போண்ட்டும், செம்பழுப்பு நிற சட்டையும் அணிந்து வெவ்வேறு கெட்டப்புகளில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பில் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.