×

அழகிய மயிலோ இவள்…டிரெஷ்னல் லுக்கில் நடிகை வாணி போஜன்..

சின்னத்திரையில் இல்லதரசிகள் விரும்பும் நாயகியாக நடித்து வந்தவர் வாணி போஜன். மாடல் அழகியாக தன்னுடைய பணியை தொடங்கிய அவர், ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மாயா’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ண. இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வ திருமகள்’ சீரியலில் ஹோம்லி லுக்கில் நடித்திருந்தார். இந்த சீரியலில் அவர் நடித்திருந்த ‘சத்யா’ என்ற கேரக்டர் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலமானது. இதையடுத்து ஜீ தமிழில் ‘லட்சுமி வந்தாச்சு’ என்னும் சீரியலில்
 

சின்னத்திரையில் இல்லதரசிகள் விரும்பும் நாயகியாக நடித்து வந்தவர் வாணி போஜன். மாடல் அழகியாக தன்னுடைய பணியை தொடங்கிய அவர், ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மாயா’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ண.

இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வ திருமகள்’ சீரியலில் ஹோம்லி லுக்கில் நடித்திருந்தார். இந்த சீரியலில் அவர் நடித்திருந்த ‘சத்யா’ என்ற கேரக்டர் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலமானது. இதையடுத்து ஜீ தமிழில் ‘லட்சுமி வந்தாச்சு’ என்னும் சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்தார்.

இந்த சீரியல்கள் மூலம் நெம்பர் ஓன் இடத்தை பிடித்து சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருந்தார். வாணி போஜனின் விடாமுயற்சி அவரை சினிமாவுக்கு கொண்டு சென்றது. முதல் படத்திலேயே தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தார். இதைத்தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’ ‘லாக்கப்’ படத்திலும், ஹாட்ஸ்டார் தளத்திற்காக நடிகர் ஜெய்யுடன் இணைந்து ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் வாணி.

தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இதையடுத்து சூர்யா தயாரிப்பில் உருவாகும் ஒரு படம், ‘விக்ரம் 60’ படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஒரு‌படம், அறிமுக இயக்குனர் வெங்ட் இயக்கத்தில் அசோக் செல்வனுடன் ஒரு படம், த்ரில்லர் படம் ஒன்றில் பரத்துடன் இணையும் ஒரு‌படம் என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

சமீபகாலமாக போட்டோஷூட்டுகளை நடத்தி வெளியிட்டு வரும் வாணி போஜன், புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.