மாடர்ன் காஸ்டியூமில் மனம் மயக்கும் அழகி கீர்த்தி சுரேஷ்!
May 17, 2022, 20:10 IST
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி கடைசியாக அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து 'சாணிக் காயிதம்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் கீர்த்தி மற்றும் செல்வராகவனின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கீர்த்தி சுரேஷ் அரிதாகவே போட்டோஷூட் நடத்துவதுண்டு. அப்படி வெளியாகும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களை அதிரச் செய்யும். தற்போது கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகின்றன.