மாலத் தீவில் உல்லாசம்... நடிகை மம்தா மோகன்தாஸின் ஹாட்& ஸ்வீட் புகைப்படங்கள்!
Updated: Jun 24, 2022, 17:41 IST
பிரபல நடிகை மம்தா மோகன்தாஸின் வெகேஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் மம்தா மோகன்தாஸ். இவர் விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் குரு என் ஆளு, தடையறத்தாக்க, குசேலன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இறுதியாக விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து ஊமை விழிகள் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது மம்தா மாலத்தீவில் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். உல்லாசமாக வெகேஷன் நாட்களைக் கொண்டாடும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.