அழகினிலே நீராடும் முழு நிலா... நடிகை சுனைனாவின் அசத்தல் போட்டோஷூட்!
Aug 21, 2022, 14:54 IST
நடிகை சுனைனாவின் லேட்டஸ்ட் பாரம்பரிய உடை போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகை சுனைனா நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சமர், வன்மம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்தார். 'சில்லு கருப்பட்டி' படத்தின் கடைசியாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த சுனைனா தற்போது விஷால் உடன் 'லத்தி' படத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சுனைனா ரெஜினா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்தப் படம் பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் டொமின் டிசில்வா இயக்கி வருகிறார். இந்தப் படம் பல மொழிகளில் உருவாகிறது.
தற்போது சுனைனா புடவையில் தேவதையாக மின்னும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.