×

சும்மா தகதகன்னு மின்னுறீங்களே... மாளவிகா மோகனின் அசத்தல் போட்டோஷூட்!

 

நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட்லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. 

ரஜினியின் 'பேட்ட' படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மோகனன் முதல் படத்திலேயே இளைஞர்கள் மனதைக் கவர்ந்துவிட்டார். அதையடுத்து மாஸ்டர் படத்தின் மூலம் மேலும் அதிக ரசிகர்களைச் சம்பாதித்தார். பின்னர் தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்தார்.

இந்தப் படங்களை அடுத்து மாளவிகா வேறு எந்தப் படத்திலும் இணைந்துள்ளதாகத் தெரியவில்லை. மாளவிகா மோகனன் போட்டோஷூட் வெளியிட்டாலே அன்று சோசியல் மீடியாக்களில் சென்சேஷன் தான். 

தற்போது மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்டிங் அவர் ஜொலிக்கும் ஆடையில் மின்னுகிறார். வழக்கம் போல போட்டோக்களைப் பார்த்த உடன் ஆட்டோமேட்டிக் ஆக ஹார்ட் பட்டனை தெறிக்கவிடுகின்றனர் நெட்டிசன்கள்!