×

ஓவியாவின் காதலர் இவரா? வைரலாகும் போட்டோ…

நடிகை ஓவியா ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இவர் ஓவியாவின் காதலாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். களவாணி படத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் அறிமுகமானவர், நடிகை ஓவியா. பின்னர் கலகலப்பு, மெரினா, மதயானைக்கூட்டம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் முதன்முதலாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக களமிறங்கிய ஓவியா, சினிமாவை விட இதில்தான் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக
 

நடிகை ஓவியா ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இவர் ஓவியாவின் காதலாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

களவாணி படத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் அறிமுகமானவர், நடிகை ஓவியா. பின்னர் கலகலப்பு, மெரினா, மதயானைக்கூட்டம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் முதன்முதலாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக களமிறங்கிய ஓவியா, சினிமாவை விட இதில்தான் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நிறைய போட்டியாளர்கள் இருந்தாலும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தார். காலையில் அவர் எழுந்து ஆடும் டான்ஸ், ஓட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டது. டைட்டில் வின்னர் ஓவியாதான் என்றளவுக்கு பில்டப் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளராக இருந்த ஆரவ், ஓவியா ஜோடியின் காதல் லீலைகள் வேற லெவல். பிக்பாஸ் முடிவுற்றப்பிறகு ஓவியாவைதான் திருமணம் செய்யப்போகிறார் ஆரவ் என்று வதந்திகள் இணையத்தில் உலா வந்தன.

இந்நிலையில் ஓவியா தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவருக்கு ஓவியா முத்தம் கொடுப்பது போன்று புகைப்படம் பதிவிட்டிருந்தது. இதனால் ஓவியாவின் காதலர் இவராதானா என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.