×

சூப்பர் தகவல்: 200 நாடுகளில் நேரடி ஒளிபரப்பாகும் ‘96வது ஆஸ்கர் விருது விழா’.

 

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை  சுமார் 200 நாடுகளில் நேரலையில் ஒளிபரப்ப உள்ளதாக  கமிட்டி அறிவித்துள்ளது.

சினிமாதுறையில் எல்லா கலைஞனும் எப்படியாவது வாழ்கையில் ஒருமுறையாவது வாங்கிவிடவேண்டும் என நினைக்கும் ஒரு விருது ‘ஆஸ்கர்’.  முன்பெல்லாம ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்து ஆஸ்கர் விருது தற்போது அனைத்து மொழி படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன்முறையாக இந்தியாவில் ‘காந்தி’ படத்திற்காக சத்யஜித்ரேவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.  அதனை தொடர்ந்து ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்திற்காக ஏ. ஆர் ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளும், ரசூல் பூக்குட்டிக்கு ஒரு விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு படலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு விருது கிடைத்தது. அடுத்ததாக ‘எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண படத்திற்காக கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு விருது கிடைத்தது.  சமீபத்திய தகவல்படி  96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த 2024ல் மார்ச் 10ம் தேதி நடத்தப்படுவதாகவும், அந்த நிகழ்ச்சி டால்பி தியேட்டரில் நடத்தப்படும் என்று ஆஸ்கார் அகாடமி அறிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியை ஏபிசியின் மூலம் 200 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அசத்தலான தகவலை அறிவித்து சினிமா ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளது கமிட்டி.