×

கொரோனாவால் தள்ளிப்போன அவதார் 2 படத்தின் ரிலீஸ் தேதி…

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப்படம், முதன் முதலில் உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும், பிரம்மாண்ட காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து
 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேல்  வசூலித்த இந்தப்படம்,  முதன் முதலில் உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும்,  கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும், பிரம்மாண்ட காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த 4 பாகங்களுக்காக அறிவிப்பை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 2016ல் அறிவித்தார்.. இவை முதல் பாகத்தைவிட சிறப்பாக இருக்கும் எனவும், அடுத்த பாகங்கள் அனைத்து 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் எனவும் கூறினார்.
அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7,500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன. 2017ஆம் ஆண்டு தொடங்கிய அவதார் 2 படப்பிடிப்பு, கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவதார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் கொரோனா பரவல் நியூசிலாந்தில் குறைந்ததால், கடந்த ஜூன் மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். இருப்பினும் அவதார் படத்தை திட்டமிட்டபடி அடுத்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிட முடியாது என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவதார் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்தில் படப்பிடிப்பில் நடத்தி வருகிறோம். கொரோனாவுக்கு முன்பு வரை டிசம்பர் 2021-ல் வெளியிட்டுவிடலாம் என திட்டமிட்டு இருந்தோம். தற்போதைய தாமதங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவதார் அடுத்த பாகங்களின் புதிய ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. : அவதார் 2 – 16. 12 .2022
அவதார் 3- 20.12. 2024
அவதார் 4- 18.12. 2026
அவதார் 5- 22.12. 2028ம்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவதார் 2 இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர், அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் 11வது முறையாக  படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் அவதார் 2 படத்தைப் பார்ப்பதற்குள் தங்களுக்கு வயதாகிவிடும் போல் இருக்கிறது என ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்..