×

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர் இயக்குனர்கள் கூட்டணியில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படம்!

ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய எஸ்ட்ராக்சன் படம் நெட்பிலிக்ஸில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. நெட்பிலிக்ஸில், வெளியான முதல் மாதத்தில் அதிகம் பார்வைகளை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமை எஸ்ட்ராக்சன் படத்திற்கு கிடைத்தது. இந்த படத்தில் அவஞ்சர் படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிரிஸ் ஹெம்ஸ்வேர்த் நடித்திருந்தார். எஸ்ட்ராக்சன் படத்திற்கு பிறகு ரஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் ஒரு ஆக்ஷன் அதிரடி திரைப்படத்தை எடுக்க உள்ளனர். இந்த படம் ஜோ ரஸ்ஸோ மற்றும் ஆண்டனி ரஸ்ஸோ ஆகியோர்களால் இயக்கப்படவுள்ளது.
 

ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய எஸ்ட்ராக்சன் படம் நெட்பிலிக்ஸில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. நெட்பிலிக்ஸில், வெளியான முதல் மாதத்தில் அதிகம் பார்வைகளை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமை எஸ்ட்ராக்சன் படத்திற்கு கிடைத்தது. இந்த படத்தில் அவஞ்சர் படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிரிஸ் ஹெம்ஸ்வேர்த் நடித்திருந்தார்.
எஸ்ட்ராக்சன் படத்திற்கு பிறகு ரஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் ஒரு ஆக்ஷன் அதிரடி திரைப்படத்தை எடுக்க உள்ளனர். இந்த படம் ஜோ ரஸ்ஸோ மற்றும் ஆண்டனி ரஸ்ஸோ ஆகியோர்களால் இயக்கப்படவுள்ளது.

Russo Brothers
இந்த படத்தில் கிறிஸ் இவான்ஸ் மற்றும் ரையன் கோஸ்ட்லின் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘தி கிரே மேன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளது. நெட்ஃபிளிக்சில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இதுவாகும். கிரே மேன் என்ற வெற்றி பெற்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது.

ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் கிறிஸ் எவன்ஸ் கூட்டணி, கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர், கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போர், அவென்ஜர்ஸ்: இன்பினிட்டி வார், மற்றும் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் உள்ளிட்ட மார்வெல் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.