×

ஏஞ்சலினா ஜூலி வீட்டிற்கு மறைமுகமாக சென்ற பிராட் பிட்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் பிராட் பிட். இவர் ஃபைட் கிளப், செவன், கியூரியஸ் கேஸ் ஆஃ பெஞ்சமின் பட்டன் போன்ற உலக அளவில் பிரபலமான பல படங்களில் நடித்தவர். ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் ஏஞ்சலினா ஜோலியை 2014 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். இவர்கள் இருவரும் ஹாலிவுட் மிகப்பிரபலமான ஜோடியாக இருந்து வந்தனர். அதையடுத்து, கடந்த 2019 ஆம் வருடம் இவர்கள் இருவரும் பிரிந்தனர். பிராட் பிட் தனது முன்னாள் மனைவியான ஏஞ்சலினா ஜூலியின் வீட்டிலிருந்து
 

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் பிராட் பிட். இவர் ஃபைட் கிளப், செவன், கியூரியஸ் கேஸ் ஆஃ பெஞ்சமின் பட்டன் போன்ற உலக அளவில் பிரபலமான பல படங்களில் நடித்தவர். ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் ஏஞ்சலினா ஜோலியை 2014 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். இவர்கள் இருவரும் ஹாலிவுட் மிகப்பிரபலமான ஜோடியாக இருந்து வந்தனர். அதையடுத்து, கடந்த 2019 ஆம் வருடம் இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

பிராட் பிட் தனது முன்னாள் மனைவியான ஏஞ்சலினா ஜூலியின் வீட்டிலிருந்து வேகமாக வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இருவரும் பிரிந்ததில் இருந்து பிராட் பிட் ஏஞ்சலினா வீட்டிற்கு சென்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலி வீட்டில் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் இருந்ததாகவும் பின்பு அங்கிருந்து வேகமாக வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


பிராட் பிட் ஏஞ்சலினா ஜோலியின் வீட்டு வளாகத்தில் இருந்து பைக்கில் வெளியேறும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. தங்கள் குழந்தைகளை பராமரித்து கொள்வதில் இருவருக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யவே அவர் இங்கு வந்திருக்கலாம் என்று அங்குள்ள பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.