×

அட நம்ம வால்டர் வைட்டுக்கு கொரோனாவாம்… கொரோனவிலிருந்து மீள வழி கூறிய ‘பிரேக்கிங் பேட்’ ஹீரோ!

‘பிரேக்கிங் பேட்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானர் ஹாலிவுட் நடிகர் பிரையன் க்ரான்ஸ்டன். அந்த தொடரில் வால்டேர் வைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது பிரையனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தான் கொரோனவிலிருந்து மீண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி அவர் என்ன சொன்னார், “இந்த கொரோனாவால் நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் அனைவரும் முடங்கியுள்ளோம் என்னைப் போலவே, நீங்களும் இதனால் சோர்வடைந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள்
 

‘பிரேக்கிங் பேட்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானர் ஹாலிவுட் நடிகர் பிரையன் க்ரான்ஸ்டன். அந்த தொடரில் வால்டேர் வைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது பிரையனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தான் கொரோனவிலிருந்து மீண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி அவர் என்ன சொன்னார், “இந்த கொரோனாவால் நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் அனைவரும் முடங்கியுள்ளோம்
என்னைப் போலவே, நீங்களும் இதனால் சோர்வடைந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் இன்னும் சற்று பொறுமை காக்க உங்களை ஊக்கப்படுத்த முயல்கிறேன். ஊரடங்கு நேரத்தின் அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் நான் மிகவும் கண்டிப்பாக இருந்தேன் … இன்னும் இருப்பேன்… நான் வைரஸைக் கட்டுப்படுத்தினேன். ஆம். இப்போது 150,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அச்சமளிக்கிறது. நான் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவன்.


உங்கள் அனைவரின் வேண்டுதலையும் அறிவேன். முகமூடியை அணிந்துகொண்டு, கைகளை கழுவிக் கொள்ளுங்கள், சமூக இடைவேளி விட்டு இருக்கும் படியும் உங்களை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் நாம் இந்தப் போரில். நாங்கள் வெற்றிபெற முடியும் – ஆனால் நாம் ஒன்றாக விதிகளை பின்பற்றினால் மட்டுமே. அனைவரும் நலமாக இருங்கள் “என்று அவர் பதிவிட்டார்.

1981 முதல் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பிரையன் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
ஹாலிவுட்டிலும் பல நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டாம் ஹாங்க்ஸ் – ரீட்டா வில்சன், இட்ரிஸ் எல்பா, டேனியல் டே கிம், இந்திரா வர்மா மற்றும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர்.