×

பிரபல ஹாலிவுட் நிறுவனத்தின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்!

உலகை உலுக்கிய கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். திரைத்துறை கொரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் தியேட்டரில் வெளியாக வேண்டிய படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. தற்போது தியேட்டர்கள் 50% சதவீத இருக்கைகளுடன் இயங்கி வருகிறது. இருந்தாலும் பெரிய படங்கள் தியேட்டருக்கு வர தயக்கம் காட்டுகின்றன. ஹாலிவுட் கூட இதற்கு விதி விலக்கல்ல. பல பெரிய ஹாலிவுட் படங்களும்
 

உலகை உலுக்கிய கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். திரைத்துறை கொரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் தியேட்டரில் வெளியாக வேண்டிய படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.

தற்போது தியேட்டர்கள் 50% சதவீத இருக்கைகளுடன் இயங்கி வருகிறது. இருந்தாலும் பெரிய படங்கள் தியேட்டருக்கு வர தயக்கம் காட்டுகின்றன. ஹாலிவுட் கூட இதற்கு விதி விலக்கல்ல. பல பெரிய ஹாலிவுட் படங்களும் ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.

தற்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் 2021-ம் ஆண்டில் தங்கள் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து படங்களையும் தியேட்டர் மற்றும் எச்.பி.ஓ மேக்ஸ் தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் ட்விட்டரில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் . “இந்த ஆண்டு நாங்கள் உங்களுக்காக ஒன்று வைத்திருக்கிறோ. வெளியாகும் அனைத்து படங்களும் திரையரங்குகளிலும், HBO மேக்ஸிலும் அதே நாளில் வெளியாகும்.. டிசம்பர் 25 முதல் வொண்டர் வுமன் 1984 படம் எச்.பி.ஓ மேக்ஸ் மற்றும் தியேட்டர்களில் வெளியாகும். அமெரிக்காவில் எச்.பி.ஓ மேக்ஸில் சந்தாதாரர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமலே கிடைக்கும்.” என்றும் தெரிவித்துள்ளனர்.

வார்னர் பிரதர்ஸ் ’202-ல் டூன், தி சூசைட் ஸ்குவாட், டாம் & ஜெர்ரி, தி கன்ஜூரிங்: தி டெவில் மேக் மீ டூ இட், கிங் ரிச்சர்ட் மற்றும் யூடாஸ், மற்றும் பிளாக் மேசியா ஆகிய படங்கள் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக இருக்கிறது.