×

சார்லி சாப்ளின் நினைவு தினம்

 

நகைச்சுவை என்ற மருந்தால் மக்களின் மனதில் இருந்த கவலைகளை மறக்கடித்த மகா மனிதன் சார்லி சாப்ளினின் நினைவு நாள் இன்று.

1889-ம் ஆண்டு லண்டனில் ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தவர் சார்லி சாப்ளின். சிறிய கோட், ஹிட்லர் மீசை, தலைக்கு மேல் தொப்பி, சிறு தாடி, விசித்திர நடை என தனது உடல் மொழியின் மூலமாகவே மக்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுபவர் சார்லி. தன் நகைச்சுவையால் உலகம் மக்கள் அனைவரையும் இன்று வரை தன் ரசிகர்களாக கட்டிப்போட்டுள்ள சார்லி சாப்லின் இறந்த தினம் இன்று. மேடை கலைஞருக்கு மகனாக பிறந்தவர் சார்லி சாப்ளின். தந்தை விட்டுச் சென்றதால் கடும் வறுமைக்கு ஆளான அவர்,  மது விடுதிகளில் நடித்து பணம் சம்பாதிக்க தொடங்கினார். சாப்ளினின் உயரம் குறைவே அவருக்கு சாதகமாக அமைந்தது. 

1975-ம் ஆண்டு அவருக்கு பிரிட்டிஷ் அரசு சர் பட்டம் வழங்கியது. இரண்டு ஆஸ்கர் சிறப்பு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், சார்லி சாப்லின் கடந்த 1977-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி காலமானார்.