×

‘காட்ஸில்லா vs காங்’ படத்தின் டீசர் வெளியீடு… படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…

‘காட்ஸில்லா vs காங்’ படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தள்ளது. ஹாலிவுட்டில் மான்ஸ்டர்வெர்ஸ் படவரிசை படங்கள் வெளியாகிறது என்றாலே உலக ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். மான்ஸ்டர்வெர்ஸ் சீரிஸில் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி வருகின்றன. லெஜண்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரிஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது கடந்த 2014ல் மான்ஸ்டர்வெர்ஸ் சீரியல் முதல் படமாக ‘காட்ஸில்லா’ வெளி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று வருட இடைவெளியில் 2017ம் ஆண்டு ‘தி ஸ்கல்
 

‘காட்ஸில்லா vs காங்’ படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தள்ளது.

ஹாலிவுட்டில் மான்ஸ்டர்வெர்ஸ் படவரிசை படங்கள் வெளியாகிறது என்றாலே உலக ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். மான்ஸ்டர்வெர்ஸ் சீரிஸில் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி வருகின்றன. லெஜண்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரிஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது

கடந்த 2014ல் மான்ஸ்டர்வெர்ஸ் சீரியல் முதல் படமாக ‘காட்ஸில்லா’ வெளி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று வருட இடைவெளியில் 2017ம் ஆண்டு ‘தி ஸ்கல் ஐலேண்ட்’ படம் வெளி வந்தது.அதன்பிறகு காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ படம் கடந்த 2019ம் ஆண்டு வந்ததது.இந்த படம் ரசிகர்களின் ஹாலிவுட் விருந்தாக அமைந்திருந்தது.

இந்த வரிசையில் அடுத்து வரவுள்ள படம் ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’. ஆடம் விங்கார்ட் இயக்கியுள்ள இந்த படத்தை லெஜண்ட்ரி நிறுவனத்துடன் இணைந்து வார்னர் ப்ரதர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

உலகத்தையே அழிக்க நினைக்கும் காட்ஸில்லாவுக்கும்,உலகத்தை காக்க போராடும் காங்குக்கும் இடையே நடக்கும்ஆக்ஷன் படம்தான் இது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படம் இந்தியாவில் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ளது.