×

பிரபல ஹாரிபாட்டர் நடிகர் மரணம்.. சோகத்தில் உலக ரசிகர்கள்…

பிரபல ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஹாரிபாட்டர் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இங்கிலாந்து நடிகர் பால் ரிட்டர். 1966ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நகரில் பிறந்தார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து, அதன்பிறகு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்பு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து புகழ்பெற்றார். கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம்
 

பிரபல ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஹாரிபாட்டர் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இங்கிலாந்து நடிகர் பால் ரிட்டர். 1966ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நகரில் பிறந்தார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து, அதன்பிறகு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்பு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து புகழ்பெற்றார்.

கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘ஹாரிபாட்டர் அண்ட் தி ஹாஃப் பிளட் பிரின்ஸ்’. இந்த படத்தில் எல்ட்ரட் வோர்ப்ளே எனும் கேரக்ரில் நடித்து உலக ரசிகர்களிடையே புகழ்பெற்றார். அதன்பிறகு ‘குவாண்டம் ஆஃப் சொலாஸ்’ எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் நடித்துள்ளார். எராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், ஏகப்பட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் ஹெச்.பி.ஓவில் வெளியான செர்னோபில் தொடர் ரசிகர்களின் மனம் கவர்ந்தது.

55 வயதாகும் பால் ரிட்டர், சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டார். இவருக்கு மூளை கட்டி நோய் இருந்ததாக பரலாக பேச்சு அடிப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.