×

அமேசானுடன் கைகோர்க்கும் பிரியங்கா சோப்ரா… உலகளவில் பிரபலமாகும் நடிகை !

பாலிவுட் நடிகை, இந்திய நடிகை தற்போது உலக நடிகையாக விஸ்வருபம் எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது இவர் குளோபல் ஐகான் என்று தான் அழைக்கப்படுகிறார். ஹாலிவுட்டில் தனக்கான மாப்பிள்ளையையும் தேடிக் கொண்டார். பெரும்பாலும் இந்திய நடிகர்கள் ஹாலிவுட்டில் நுழைவது கடினம். அப்படியே நடித்தாலும் சிறு வேடங்களில் நடிப்பர். ஆனால் இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து ஹாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வெற்றி பெற்ற பெருமை பிரியங்கா சோப்ராவைச் சேரும். தற்போது நடிப்பு மட்டுமில்லாமல், உலக முன்னனி நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து
 

பாலிவுட் நடிகை, இந்திய நடிகை தற்போது உலக நடிகையாக விஸ்வருபம் எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது இவர் குளோபல் ஐகான் என்று தான் அழைக்கப்படுகிறார். ஹாலிவுட்டில் தனக்கான மாப்பிள்ளையையும் தேடிக் கொண்டார். பெரும்பாலும் இந்திய நடிகர்கள் ஹாலிவுட்டில் நுழைவது கடினம். அப்படியே நடித்தாலும் சிறு வேடங்களில் நடிப்பர். ஆனால் இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து ஹாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வெற்றி பெற்ற பெருமை பிரியங்கா சோப்ராவைச் சேரும்.

தற்போது நடிப்பு மட்டுமில்லாமல், உலக முன்னனி நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து அவர்களின் பிராண்ட்களை விளம்பரப்படுத்தி வருகிறார். தற்போது அமோசான் பிரைமில் நிகழ்ச்சி ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அமேசானுடன் பர்ஸ்ட் வியூ தொலைக்காட்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“ஆம், நாங்கள் அமேசானுடன் இணைந்துள்ளோம். இந்த செய்தியை இறுதியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறோம். ஏற்க்கனவே எங்கள் பாதையில் வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். நல்ல கதைகளுக்கு எல்லையில்லை என்பது அமேசான் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு கதாசிரியராக பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, திறந்த மனது மற்றும் முன்னோக்கிய புதிய யோசனைகளை ஆராய்வதற்கு தொடர்ந்து என்னைத் தூண்டுவதே எனது தேடலாகும்.” என்று தெரிவித்துள்ளார்.