×

‘திரிஷ்யம்’ கிளைமாக்ஸை மாற்றிய இயக்குனர்.. ஏன் தெரியுமா ?

‘திரிஷ்யம்’ சீனா மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையடுத்து தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வெற்றிப்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்கும் பலமொழிகளில் உருவாகி வருகிறது. இதற்கிடையே ‘திரிஷ்யம் 3’ உருவாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில்
 

‘திரிஷ்யம்’ சீனா மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையடுத்து தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வெற்றிப்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்கும் பலமொழிகளில் உருவாகி வருகிறது. இதற்கிடையே ‘திரிஷ்யம் 3’ உருவாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் மூன்றாவது முறையாக மோகன் லாலும், ஜீத்து ஜோசப்பும் இணைந்துள்ளதாக தகவல் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் சீன மொழியில் Sheep Without a Shepherd என்ற பெயரில் ரீமேக்கானது. இந்த படத்தின் கிளைமாக்சில் கதாநாயகன் எப்படி போலீசிலிருந்து தப்பிக்கிறார் என்பதுதான். ஆனால் சீனா சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர் சித்திரவதை செய்வதை அந்நாட்டு சென்சார் போர்டு ஒத்துக்கொள்ளாது. அதனால் கிளைமாக்ஸில் நாயகன் சரண் அடைவது போல் காட்டப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சீனாவில் இந்த படம் மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது.