×

என்ன மக்களே தயாரா!- வெளியானது ‘ஸ்குவிட் கேம்2’.

 

எக்கசக்கமான ரசிகர்களை பெற்ற ஸ்குவிட் கேம் சீரிஸின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்த சமயத்தில் பொழுதுபோக்கிற்காக அதிகமாக ஒடிடி தளங்களை பயன்படுத்தினார்கள். அந்த சமயத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான வெப் சீரிஸ்தான் ‘ஸ்குவிட் கேம்’.  விளையாட்டில் போட்டியில் விளையாடும் நபர்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் விளையாடும் போட்டிகள் தான் இந்த தொடர். பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் அமரவைத்த இந்த தொடர் இந்தியாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இப்படி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடரின் இரண்டாவது சீசன் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை செம குஷியாக்கியுள்ளது.