×

பிரபல ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ் டார்த் வேடர் காலமானார் !

ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ், நடிகர் டேவிட் ப்ரூஸ் இன்று காலமானார். டேவிட் பிரஸ் புகழ்பெற்ற ஹாலிவுட் தொடரான ஸ்டார் வார்ஸ் மூன்று பாகங்களில் நடித்துள்ளார். அப்படத்தில் டார்த் வேடர் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 85 வயதான புரோஸ் சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு
 

ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ், நடிகர் டேவிட் ப்ரூஸ் இன்று காலமானார்.

டேவிட் பிரஸ் புகழ்பெற்ற ஹாலிவுட் தொடரான ஸ்டார் வார்ஸ் மூன்று பாகங்களில் நடித்துள்ளார். அப்படத்தில் டார்த் வேடர் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

85 வயதான புரோஸ் சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவு குறித்து ஸ்கைவால்கராக நடித்த மார்க் ஹமில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ட்விட்டர் பதிவில் புரூஸுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,

“டேவிட் ப்ளூஸ் மறைந்துவிட்டார் என்று கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது” ,“அவர் ஒரு நல்ல மனிதர், டார்த் வேடரை விட நல்ல மனிதர் . நடிகர்-கணவர்-தந்தை-பிரிட்டிஷ் பேரரசின் ஆணை -3 முறை பிரிட்டிஷ் பளுதூக்குதல் சாம்பியன் & பாதுகாப்பு ஐகான் கிரீன் கிராஸ் கோட் மேன். அவர் தனது ரசிகர்களை மிகவும் நேசித்தார். ”என பதிவிட்டுள்ளார்.

டேவிட் ப்ரூஸ் தனது ஆரம்பகாலகட்டத்தில் பளுதூக்குபவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.