×

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி…

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 24ம் தேதி தனது செல்ல நாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் டான்யா, அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசக் கருவி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டப்போதிலும், சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு
 

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 24ம் தேதி தனது செல்ல நாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் டான்யா, அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசக் கருவி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டப்போதிலும், சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. ஆனால் அதை மறுத்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில் டான்யா மரணம் அடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான்யாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டான்யா, 1975-ல் ஃபோர்ட்ஸ்டு என்ட்ரி என்ற படத்தில் அறிமுகமானவர். 65 வயதான அவர், எ வியூ டூ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்தார். 1994-ல் கடைசியாகப் படங்களில் நடித்தவர், தொலைக்காட்சித் தொடர்களில் அதிகமாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். 70களில் ஜேம்ஸ் பாண்ட் படம் மூலம் பலர் மனங்களை கொள்ளைக் கொண்டார் டான்யா என்பது மறுக்க முடியாத உண்மை.