×

மியா கலிஃபா தற்கொலை??.. வதந்திக்கு வேடிக்கையாக முற்றுப்புள்ளி வைத்த ஆபாச பட நடிகை…

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆபாச படங்களில் நடித்து வருபவர் மியா கலிஃபா. தனது முதல் கணவரை 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த அவர், அதன் பிறகு ராபர்ட் சென்ட்பெர்க் என்பவரை காதலித்து வந்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள விருந்த நிலையில், கொரோனா காரணமாக அது தள்ளிப்போனது. இந்நிலையில் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மியா கலிஃபா, சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தலைகாட்டாமல் இருந்தார்.
 

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆபாச படங்களில் நடித்து வருபவர் மியா கலிஃபா. தனது முதல் கணவரை 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த அவர், அதன் பிறகு ராபர்ட் சென்ட்பெர்க்  என்பவரை காதலித்து வந்தார்.  இந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள விருந்த நிலையில், கொரோனா காரணமாக அது தள்ளிப்போனது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மியா கலிஃபா,  சில  நாட்களாக  சமூக வலைத்தளங்களில் தலைகாட்டாமல் இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மன அழுத்தம் காரணமாக மியா தற்கொலை செய்துவிட்டார் என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர். ஆனால், மியா கலிஃபா மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டதால்தான் சமூக வலைத்தளத்திற்கு வராமல் ஓய்வு எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மியா கலிஃபா குறித்து பரவிய வதந்திக்கு அவர் ட்விட்டரில் கேலிக்கையாக ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், “எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்துகளைக் கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்” என்று வேடிக்கையாக பதிலளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.