×

பார்க்கிங் திரைப்படம்-  விமர்சனம்

 

சென்னை தெருக்களில்… தொடர்ந்து 15 நாள் ஒரே இடத்தில் ஒரு கார் நின்றால் காரைத் தூக்கிடுவோம் என்று சென்னை கார்ப்பரேசன் சமீபத்தில் ஒரு அறிக்கை விட்டதே ஞாபகம் இருக்கா! குடியிருக்கிற வீட்டில் கார் நிப்பாட்ட இடமில்லாமல் எங்க கேப் கிடைக்குதோ அங்க நிறுத்திட்டுப் போறது இப்போல்லாம் ரொம்ப சாதரணமாப் போச்சு.இதுக்கு காரணம், கார்களோட எண்ணிக்கை அதிகமானது தான்! 

தவிர, பல வீடுகளில் போதுமான கார் பார்க்கிங் இருக்காது. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் நிறுதிக்கலாம் என்று சொல்லும், அப்பார்ட்மெண்ட் அட்ராசிட்டிகளை நானே அனுபவித்திருக்கிறேன். கார் என்பது மட்டுமில்லை, டூ வீலர்; சைக்கிள் உட்பட பல பார்க்கிங் பஞ்சாயத்தைக் கடக்காத ஆட்களே இருக்க முடியாது.

அப்படியொரு பஞ்சாயத்து சம்பவத்தை வைத்து ஹரிஷ் கல்யாண் - எம். எஸ். பாஸ்கர் இருவரையும் வைத்து, தரமான சம்பவம் செய்திருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

செவெண்டிஸ் கிட்ஸ் க்கும் 2k கிட்ஸ் க்குமான ஈகோவை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ஒருமணிதனின் ஈகோவை டச் பண்ணினால் எந்த எக்ஸ்ட்ரீம் வரை போவார்கள் என்பதை ஹரிஷ் அண்ட் எம். எஸ். பாஸ்கர் இருவரும் வெறிகொண்டு நடித்திருக்கிறார்கள்.

செகண்ட் ஹாஃப் ல் சில குறைகள் இருந்தாலும்,வழக்கமான கதைக்குள் போகாமல் புதிதாக யோசித்ததுக்காகவே இயக்குனரைப் பாராட்டலாம். எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் தான் என்றாலும்: கடையாக எம். எஸ். பாஸ்கர் சொல்லும் டயலாக் செம டச். அவசியம் பார்க்க வேண்டிய படம்.

V.K.சுந்தர்