×

#1 ட்ரெண்டிங்கில் ‘லெவன்’.. இந்த அபரிமிதமான அன்புக்கு நன்றி..- உற்சாகத்தில் நவீன் சந்திரா.. 

 

‘லெவன்’ திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நடிகர் நவீன் சந்திரா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இயக்குநர் சுந்தர்.சி-யின் உதவி இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெவன்’.அஜ்மல் கான் மற்றும்  ரியா ஹரி  ஆகியோரது கூட்டணியில் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.  தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகியுள்ள இந்தப்படத்தில் ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இதில், இமான் இசையமைத்துள்ளார்.  

இது புலனாய்வு த்ரில்லர் படமாக உருவான இந்தப்படம் ,  இதுவரை வந்த படங்களில் இருந்து மாறுபட்ட திரைக்கதையுடன் அமைந்துள்ளது.   நவீன் சந்திரா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முன்னதாக கடந்த மே 16ம் தேதி ‘லெவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  அடுத்தடுத்து மர்மமாக நடைபெறும் கொலைகள்,  அதை கண்டுபிடிக்க வரும் காவல் உதவி  ஆணையராக அரவிந்தன் (நவீன் சந்திரா).  கொலை செய்வது யார்?, கொலையாளியை ஹீரோ கண்டுபிடித்தாரா என்பதே கதைக்களம்.. 

படம் ஆரம்பித்த உடனேயே தொற்றிக்கொள்ளும் பரபரப்பு  க்ளைமேக்ஸ் வரை தொடர்கிறது.  எதிர்பாராத திருப்பங்கள், யூகிக்க முடியாக திரைக்கதை என பலராலும் கொண்டாடப்பட்ட ‘லெவன்’ படம்  அமேசான் ப்ரைம் வீடியோ  ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  ஓடிடியில் புதுவரவான ‘லெவன்’ படத்தை மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்த்து கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் லெவன் படம் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதற்கு நடிகர் நவீன் சந்திரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “உங்கள் அனைவரின் அபரிமிதமான அன்புக்கு நன்றி!  ‘லெவன்’ இப்போது Prime Video-வில் #1 இடத்தைப் பிடித்துள்ளது - இந்தியா முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும்.  இது ஒரு பெரிய ஆசீர்வாதம், மேலும் பார்வையாளர்களின் ஆதரவுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பார்த்த, பகிர்ந்த மற்றும் நம்பிய அனைவருக்கும்.. - இது உங்களுக்கானது.” என்று தெரிவித்துள்ளார்.