×

பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகைகள் மாயம் :  போலீசில் புகார் 

 

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார். 

சமீபத்தில் வந்தே பாரத் இரயிலில் உணவு சரியில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான புகார் கடிதத்தையும் பகிர்ந்திருந்தார். பின்பு இரையில்வே நிர்வாகம் பார்த்திபனின் புகாருக்கு வருத்தம் தெரிவித்தது. 

இந்த நிலையில் பார்த்திபன், அவரது அலுவலகத்தில் 12 சவரன் தங்க நகைகள் மாயமானதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மாயமான அந்த நகை பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணாவிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அவர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது