16 years of அயன்.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்...!
சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான அயன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. கல்ட் கிளாசிக் படமாக தயாராகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இன்னொரு பக்கம் ஆர் ஜே பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
கேவி ஆனந்தின் ஃபிரஷான ஸ்க்ரீன் ப்ளே, ஹாரீஸ் ஜெயராஜின் மியூஸிக் , அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என அனைத்து ரசிக்கும் படியாக அமைந்தது. ஒரு மெகா ப்ளாக்பஸ்டர் படமாக சூர்யாவின் கெரியரில் அயன் திரைப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.