×

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. தற்போது அவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் முன்பு நிறுத்தப்பட்ட சிம்புவின் திரைப்பட படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னட திரைப்படத்தின்
 

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. தற்போது அவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முன்பு நிறுத்தப்பட்ட சிம்புவின் திரைப்பட படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட திரைப்படத்தின் ரீமேக் ஆன முப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சிம்பு,கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் கன்னட பட இயக்குனர் நார்தன் இயக்கத்தில் வெளியாகயிருந்தது.

ஆனால் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளருடன் நடிகர் சிம்பு தகராறில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. தற்போது அந்த தயாரிப்பாளருடன் சிம்பு சமரசத்தில் ஈடுபட்டதால் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் படத்தின் இயக்குனர் நாரதன் கைவிடப்பட்டதால் , ஒரு கல்லூரியின் கதை,மாத்தியோசி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி இப்படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படப்பிடிப்பு 2021 ம் ஆண்டு தொடங்குகிறதாம் .