×

பிரியங்கா மோகனின் டிக் டாக் படத்தில் 20 நிமிட காட்சிகள் மாயம்

 

டாக்டர் படத்திற்கு முன்னதாக பிரியங்கா மோகன் நடித்திருந்த டிக் டாக் திரைப்படம் கடந்த 28-ம் தேதி வெளியானது. இப்படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் படக்குழுவினர் பார்த்தனர். அதில் பிரியங்கா மோகன் நடித்திருந்த 20 நிமிட காட்சிகள் இடம்பெறாததால் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் அந்த காட்சிகள் மாயமாகி இருந்ததால் படக்குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். 

இதுகுறித்து படத்தின் இயக்குநர் மதன் குமார் பேசுகையில், டிக் டாக் படத்தை கஷ்டப்பட்டு எடுத்து திரைக்கு கொண்டு வந்தோம். ஆனால், படம் ஓடியபோது பிரியங்கா மோகன் நடித்து இருந்த முக்கியமான 20 நிமிட காட்சிகள் இல்லாமல் மாயமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்திருந்தனர்.