×

‘சென்னை சர்வதேச திரைப்பட விழா’- விருதுகளை தட்டி தூக்கியது யார் யார்?

 

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த  14ஆம் தேதி முதல் 21 தேதி வரை நடந்து முடிந்துள்ளது. இதில் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்படன. சினி அப்ரிசேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் இந்த விழாவில் 12 தமிழ் படங்கள் திரையிடப்படும், அதில் 3 படங்கள் விருதை பெறும். அந்த வகையில் இம்முறை, அநீதி, அயோதி, கருமேகங்கள் கலைகின்றன, போர் தொழில், மாமன்னன், செம்பி, வி3, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், விடுதலை பாகம்1, உடன்பால், ராவணகோட்டம் , சாயாவனம் ஆகிய படங்கள் திரையிடப்பட்டது.

அதில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான விருதை ‘அயோதி’ படம் பெற்றுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 1லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை ‘உடன்பால்’ படம் பிடித்துள்ளது.

சிறந்த நடிகராக விருதை ‘மாமன்னன்’ படத்தில் நடித்த வடிவேலு தட்டிசென்றுள்ளார். சிறந்த நடிகையாக ‘அயோதி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு தலா 50ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.