×

வழக்கமான காதல் கதைகளில் இருந்து விலகியிருக்கும் "29" பட விமர்சனம் 

 
வாழ்க்கையில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாத 29 வயது சத்யா (விது), கிடைத்த வேலைகளை செய்து, தனக்கான அடையாளம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அவருக்கு திடீரென்று அறிமுகமாகிறார், 21 வயது விஜி என்கிற விஜயலட்சுமி (பிரீத்தி அஸ்ரானி). பிறகு அவர்கள் தங்கள் வயது இடைவெளியை மறந்து காதலிக்கின்றனர். விஜிக்கு வாழ்க்கையை பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் அவர், ஐஏஎஸ் தேர்வு எழுத செல்கிறார். முன்னதாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யாவை விட்டு பிரிகிறார். விஜி மட்டுமே தனது வாழ்க்கை என்றிருந்த சத்யா, அவரால் கிடைத்த மாற்றத்தை ஏற்றாரா? கடைசியில் அவர்கள் இணைந்தார்களா என்பது மீதி கதை.
வழக்கமான காதல் கதைகளில் இருந்து விலகியிருக்கும் வேறொரு பாணி காதல் கதை இது. எழுதி இயக்கியுள்ள எம்.ரத்னகுமார், காட்சிகளை அழகியலுடன் சொல்லி, வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். நெருக்கமான காதல் காட்சிகள், ஜென்-ஸீ ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.