அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் '2கே லவ் ஸ்டோரி' படக்குழு... 4வது பாடல் நாளை ரிலீஸ்...!
Feb 4, 2025, 16:56 IST
'2கே லவ் ஸ்டோரி' படத்தின் 4-வது பாடல் ’எதுவரை உலகமோ’ பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.