×

‘பராரி’ படத்துக்காக செங்கல் சூளையில் 3 மாதம் பயிற்சி 
 

 


தோழர் வெங்கடேசன்’ ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பராரி’. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ள இந்தப்படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் ராஜு முருகன் வழங்கும் இந்தப் படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார்.

படம்பற்றி அவர் கூறும்போது, “இது மானுடத்தைப் பற்றிபேசும் படம். திருவண்ணாமலை பகுதியில் இதன் கதை நடக்கிறது. ஒரே குலதெய்வத்தை வழிபடும் 2 சமூக மக்களின் கதையை பேசியிருக்கிறேன். இருதரப்பும் தினக் கூலியாகத்தான் இருக்கிறார்கள். இவர்களிடம் இந்த ஏற்ற தாழ்வு எப்படி வந்தது? என்ற கேள்வியை படம் முன் வைக்கிறது. அதோடு திராவிட அரசியலையும் பேசியிருக்கிறேன். இங்கிருந்து புலம்பெயர்ந்து வேலைக்குச் செல்பவர்களை மற்ற மாநிலத்தவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? அங்கே மொழி ரீதியிலான அரசியல் எப்படி இருக்கிறது என்பதையும் சக மனிதனை நேசிப்பது தான் அறம் என்பதையும் சொல்லி இருக்கிறோம். நாடகப் பள்ளியில் படித்த சுமார் 40 பேரை இதில் அறிமுகப்படுத்துகிறேன். சிலருக்கு, செங்கல்சூளை, ஜூஸ் பேக்டரியில் 3 மாதம் பயிற்சி அளித்தோம். படப்பிடிப்பு முடிந்து விட்டது” என்றார்.