☰
×

300 கோடிக்கு அதிகமான வசூலை வாரி குவித்து சாதனை படைத்த மமிதா படம் -எது தெரியுமா ?

 

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ உள்பட பலரது நடிப்பில் வெளியான படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. மலையாள சினிமாவின் சமீபத்திய மிகப்பெரிய வெற்றி படமாக இது உருவெடுத்துள்ளது. ‘பிரேமலு’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் பகத் ஃபாசில் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வெளியான 28 நாட்களில் உலகளவில் ரூ.300 கோடிக்கு அதிகமான வசூலை வாரி குவித்து சாதனை படைத்துள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனையை ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் படைத்துள்ளது