3BHK படத்தின் 'கனவெல்லாம்' பாடல் ப்ரோமோ ரிலீஸ்..!
May 20, 2025, 19:40 IST
நடிகர் சித்தார்த் நடித்துள்ள 3 பிஎச்கே படத்தின் 'கனவெல்லாம்' பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் இந்தியன் - 2, மிஸ் யூ படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அதைத்தொடர்ந்து, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் . எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்தார். இப்படத்தில் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.