×

தீபாவளிக்கு வெளியான 4 மாஸ் திரைப்படங்கள் - நீங்க என்ன படம் பாக்கப் போறீங்க?

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகார்த்திகேயனின் அமரன் (Amaran), ஜெயம் ரவியின் பிரதர் (Brother), துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் (Lucky Baskhar), கவினின் பிளடி பெக்கர் (Bloody Beggar) ஆகிய 4 முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது.

பொதுவாகவே, பண்டிகை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்புகள் உண்டு. முன்பெல்லாம், ரஜினி - கமல், விஜய் - அஜித் என போட்டிப் போட்டுக் கொண்டு படங்கள் வெளியாகும். அதனை ரசிகர்களும் கோலாகலமாகக் கொண்டாடி ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சினிமாவில் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

சாதாரண இடத்திலிருந்து தனது உழைப்பால் உயர்ந்தவர் சிவகார்த்திகேயன் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தனர். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.