×

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

 

நாளை ஒரே நாளில் தமிழில் மட்டும் 4 திரைப்படங்கள் வெளியாவதால், திரையரங்குகள் களைகட்ட காத்திருக்கின்றன. 

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வௌியாகிறது. வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்டத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.

ஐ.அஹமத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இறைவன். ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படமும் நாளை திரையரங்குகளில்  வெளியாகிறது.

இதேபோல, சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் சித்தா திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ்.யு.அருண்குமார் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஹரிஸ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் திரைப்படமும் நாளை வெளியாகிறது.