×

5 years of 96; நினைவுகளை பகிர்ந்த படக்குழு

 

பள்ளிப் பருவத்தில் மலரும் காதலை நினைவுகளாக திரையில் கொண்டு வந்த திரைப்படம் 96.

ஒளிப்பதிவாளராக இருந்து சி.பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 96 படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்,ஆதித்யா பாஸ்கர், வர்ஷா பொல்லம்மா, கௌரி கிஷன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையில் இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. 

'காதலே காதலே', 'லைஃப் ஆப் ராம்',  'தாபங்களே', உணர்வுகளை வெளிக்கொணரும் 'அந்தாதி' என அனைத்து பாடல்களும் ரசிர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 96 திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை, படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.