55வது சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு அயலி பரிந்துரை
Nov 17, 2024, 17:51 IST
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன்,லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது. இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு அயலி பிரந்துரை செய்யப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெறும் 55வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு தமிழில் வெளியான அயலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில், காலாபாணி, கோட்டா ஃபேக்டரி, லாம்பான், ஜூப்ளி ஆகிய மற்ற மொழி இணைய தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.