×

இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்! கோலிவுட் பிரியர்கள் உற்சாகம்

 

கவினின் மாஸ்க், அர்ஜுன் நடிப்பில் தீயவர் குலை நடுங்க, முனீஸ்காந்தின் மிடில் கிளாஸ், விஜய்- சூர்யா நடிப்பில் (ரீ ரிலீஸ்) ப்ரண்ட்ஸ் மற்றும் யெல்லோ, இரவின் விழிகள் ஆகிய படங்கள் நாளை திரைக்கு வருகிறது!


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புது திரைப்படங்கள் திரைக்கு வருவது வழக்கம் அந்த வகையில், ரீ ரிலீஸ் திரைப்படம் உட்பட இந்த வாரம் ஆறு படங்கள் திரைக்கு வருகிறது. 
நடிகர் கவின், கிஸ் படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ‎விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து இணை தயாரிப்பாளராகாவும் உள்ளார். கவினுக்கு ஜோடியாக ருஹானி ஷர்மா நாயகியாக நடித்துள்ள மாஸ்க் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு முதலில் வெற்றிமாறன் தயாரிப்பாளராக இருந்து, தயாரிப்பு நிறுவனத்தை மூடியதால் Mentor ஆக மாறியது குறிப்பிடத்தக்கது. நாளை இப்படம் திரைக்கு வருகிறது. 

‎தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தீயவர் குலை நடுங்க. த்ரில்லர் படமான இந்த படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இந்தப் படத்தில் விஜயலட்சுமி, காளி வெங்கட், குரேஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நாளை திரைக்கு வருகிறது. ஒரு காமெடி நடிகர் கதையின் நாயகனாக நடிக்கும் பொழுது அவருக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் தயக்கம் காட்டும் நிலையில் நடிகை விஜயலட்சுமி அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது பலரது பாராட்டியும் பெற்றுள்ளது. 
 

ஹரி மகாதேவன் இயக்கத்தில் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் யெல்லோ. ஃபீல் குட் படமாக உருவாகி இருப்பதாக படக்குழு தயாராகி உள்ளது மேலும் இந்த படம் பயணத்தின் மூலம் மன உணர்வுகளை பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இளம் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்த படமும் நாளை திரைக்கு வருகிறது. 

மறைந்த இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 2001ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ப்ரண்ட்ஸ்.இந்த படம் தற்போது 4K தரத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு நாளை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. மேலும் புதுமுகங்கள் நடித்துள்ள இரவின் விழிகள் படமும் நாளை வெளியாக உள்ளது.