×

திருவண்ணாமலை ரமண பகவானின் 75- வது ஆராதனை விழா... நடிகை சுகன்யா பாடல் பாடி வழிபாடு..!

 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமண பகவானின் 75 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ரமணர் ஆசிரமத்தில் ரமண பகவானுக்கு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ரமண பகவானுக்கு தாமரைப் பூ, மல்லிகை பூ, ரோஜா பூ உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து, வேத விர்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர கச்சேரி ஒலிக்க பகவானுக்கு நட்சத்திர ஆரத்தியும், பஞ்ச கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.