×

லியோ-ல் இணைந்த 80-ஸ் வில்லன் நடிகர்... புதிய அப்டேட் 

 

 விஜய்யின் ‘லியோ’ படத்தில் என்பதுகளில் நடித்த பிரபல வில்லன் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் மிரட்டலாக உருவாகி வருகிறது. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  

இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 25-ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் தங்களது பகுதி படப்பிடிப்பு இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் நிறைவு செய்தனர். இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு 80-களில் பிரபல வில்லன் நடிகராக இருந்த பாபு ஆண்டனி இணைந்துள்ளார். தமிழில் பூவிழி வாசலிலே, சூரியன், அஞ்சலி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் பாபு ஆண்டனி இணைந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.