90 கிட்ஸ் மனம்கவர்ந்த 96 படத்தின் 2ஆம் பாகம் லேட்டஸ்ட் அப்டேட்...!
96 பாகம் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் கலக்கி வருகிறார். அதேசமயம் நடிகை திரிஷாவும் பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று மீண்டும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2018 ஆம் ஆண்டு 96 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தினை பிரேம்குமார் இயக்கி இருந்தார். அழகான காதல் கதையில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி இன்று வரையிலும் ராம் – ஜானு இந்த இரண்டு பெயர்களும் ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது. ராம் – ஜானு என்ற இரண்டு பெயர்களையும் கேட்டவுடன் நினைவுக்கு வருவது புனிதமான காதல் தான். அந்த அளவிற்கு விஜய் சேதுபதி – திரிஷா ஆகிய இருவருக்கமான காதலின் ஆழத்தை மிக அழகாக காட்டி இருந்தார்