×

கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக நாயகனுடன் ஏ.ஆர்.ரகுமான்.. ரசிகர்களின் கவனம் ஈர்த்த புகைப்படம் !

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் ஏ.ஆர்.ரகுமான் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

திரையுலகினர் கொண்டாடும் 75வது சர்வதேச கேன்ஸ் திரைப்பட திருவிழா பிரான்ஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வரும் மே 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த திரைப்பட திருவிழாவில், தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.   

சுமார் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ள இந்த திருவிழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றுள்ளனர். இதுதவிர உலக நாயகன் கமலஹாசன், பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் இந்த விழாவில் இணைந்துள்ளனர். 

இந்த விழாவில் இந்தியா சார்பில் ‘ராக்கெட்ரி’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதையடுத்து கமலின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. இதேபோல் பார்த்திபனின் ‘இரவில் நிழல்’, பா.ரஞ்சித் படத்தின் ஃப்ர்ஸ்ட் உள்ளிட்டவையும் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்றுள்ள கமல்ஹாசனுடன் ஏ.ஆர்.ரகுமான் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.