×

“அனைத்தும் ஓபனாக பேசுங்க” - நடிகை ஓவியா 

 

எதையும் மறைக்காமல் ஓபனாக பேசுங்க என நடிகை ஓவியா கூறியுள்ளார். 

மலையாள நடிகையான ஓவியா, விமல் கதாநாயகனாக நடித்த ‘களவாணி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.  

சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக நலனிலும், பெண்கள் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் ஓவியா. பல பொது பிரச்சனைகளுக்கு இன்றுவரை குரல் கொடுத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, அவ்வெப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஓவியா கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்கக் கூடாது. எல்லாவற்றையும் ஓபனாக பேசினால்தான் தீர்வு கிடைக்கும். பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று ஆண் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கவேண்டும். அப்போது ஆண்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கமுடியும் என்று கூறினார்.