×

மிரட்டும் தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. குலை நடுங்க வைக்குது டைட்டில் ! 

 

 ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அர்ஜூன் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது திரைப்படங்கள் அடுத்தடுத்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில்  ஆசிரியையாக ஐஸ்வர்யா ராஜேஷும், காவல்துறை விசாரணை அதிகாரியாக அர்ஜூனும் நடித்து வருகிறார். 

ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ என்ற வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் குடைப்பிடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.