தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Oct 5, 2022, 13:25 IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்த வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.