×

‘துணிவு’ டப்பிங்கை முடித்த அஜித்.. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள் !

 

‘துணிவு’ படத்தின் டப்பிங்கை நடிகர் அஜித்குமார் இன்று நிறைவு செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களிலும் நடிகர் அஜித்தான் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அப்படத்தினை வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிரூத் பாடியுள்ளார்.

ஒரு உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படம் வங்கிக் கொள்ளை கதைக்களம் கொண்ட படம்.  இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் சமீபத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கியது. இந்த படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் அப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் இப்படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஏற்கனவே மஞ்சு வாரியர் டப்பிங்கை முடித்துள்ள நிலையில் அடுத்து அஜித் தனது டப்பிங்கை பேசி வந்தார். தற்போது அஜித் டப்பிங்கை முழுவதுமாக முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.